நிச்சயதார்த்தம் முடிந்து சில மாதங்கள்... படகு கவிழ்ந்து விபத்து: மாயமான இளைஞர்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃப்ரேசர் ஆற்றில் படகு கவிந்த விபத்தில் Abbotsford இளைஞர் மாயமாகியுள்ளார்.
கடந்த 7ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் 29 வயதான அந்த இளைஞர் மாயமாகியுள்ளார். சம்பவத்தன்று சுமார் 3- 3.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், படகு விபத்தில் சிக்கிய ஒருவர் மாயமான நிலையில், இன்னொருவர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, மாயமாகியுள்ள இளைஞர் 29 வயதான Damian Dutrisac எனவும், புதன்கிழமை அவர் தொடர்பில் மீண்டும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, இதில் படகு அல்லது ட்ரோன் விமானம் மூலம் தேடும் நடவடிக்கையில் பொதுமக்களும் உதவ முன்வரலாம் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் ஃப்ரேசர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில் தேடுதல் நடவடிக்கை என்பது ஆபத்தில் முடியலாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
படகு விபத்தில் காணாமல் போயுள்ள Damian Dutrisac கடந்த செப்டம்பர் மாதமே நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார் என உறவினர்களால் தெரிய வந்துள்ளது.