பத்தாவது திருமண ஆண்டு கொண்டாடிய தம்பதி: சடலமாக மீட்கப்பட்ட துயரம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பகுதியை சேர்ந்த தம்பதியே படகு விபத்தில் மரணமடைந்தவர்கள். தங்களது பத்தாவது ஆண்டு திருமண நாளை பெல்லா கூலா ஆற்றில் வாடகை படகு பயணத்தினூடே கொண்டாடியுள்ளனர்.
இந்த நிலையில் படகு கவிழ்ந்து அந்த தம்பதி ஆற்றில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை பகல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சுமார் 7.30 மணியளவில் 42 வயதான Cameron Murdoch என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.
அவரது மனைவி 51 வயதான Andrea உடல் இன்னும் மீட்கப்படவில்லை. மட்டுமின்றி, அவர் இறந்திருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
மேலும், இவர்களின் சுற்றுலா வழிகாட்டி இன்னும் மாயமானதாகவே கூறப்படுகிறது.