காசாவில் நடைபெற்றத் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 5 பேர் பலி
காசாவின் மேற்கு கரையில் நப்லஸ் பகுதி அருகே நடைபெற்றத் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 4 பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் இஸ்ரேலைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 4 பாலஸ்தீனியர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், அவர்களில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகப் பாலஸ்தீனிய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது.
இதேவேளை, காயமடைந்த 2 இஸ்ரேலியர்கள் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்புக் கூறியுள்ளது.
மேலும், இந்தத் திடீர் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலுக்கான உடனடி காரணம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இஸ்ரேலிய படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தப் பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.