அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு! 5 பேருக்கு நேர்ந்த சோகம்
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் இயங்கி வரும் மோர்கன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி கல்வி பயிலும் விடுதி மாணவர்களுக்கான உணவு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் வன்முறை அதிகரித்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.
இதனால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கிலக்காகி 5 மாணவர்கள் காயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.