கனேடிய விமான சேவையின் 4 விமானங்கள் பறிமுதல்
கனடாவின் விமான சேவையின் நான்கு விமானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலையினால் இவ்வாறு வான்கு விமானங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
றொரன்டோ, எட்மோன்டன் மற்றும் வாட்டர்லூ போன்ற பகுதிகளில் இவ்வாறு விமானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நியூயோர்க்கை மையமாக கொண்ட ஹெட்ஜ் பன்ட் நிறுவனத்தினால் கனேடிய விமான சேவை நிறுவனத்தின் விமானங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
கனடாவின் இயங்கி வரும் ப்ளயார் எனப்படும் விமான சேவை நிறுவனமே இவ்வாறு கடன் செலுத்த முடியாத நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளது.
விமானங்கள் கையகப்படுத்தப்பட்ட காரணத்தினால் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானங்களை குத்தகை அடிப்படையில் வழங்கிய நிறுவனம், கடன் செலுத்துவதற்கு எவ்வித அவகாசமும் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.