எயார் கனடா விமான சேவை பயணிகளுக்கான சலுகை
கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் கனடா விமான சேவை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் பதிவு செய்யும் விமான பயணங்கள் தடைப்பட்டால் மீள் பதிவு செய்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஏதேனும் ஓர் காரணத்தினால் திட்டமிடப்பட்ட அடிப்படையில் விமான பயணத்தை மேற்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் பயணிகள் வேறும் ஓர் திகதியை தெரிவு செய்து பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் தொழிற்சங்க போராட்டம் நடத்துவது தொடர்பில் அறிவித்துள்ள காலக்கெடு அறிவித்துள்ளது.
அந்தக் காலப்பகுதியில் இந்த பயண சீட்டுகளை மீள் பதிவு செய்து கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான எயார் கனடா விமான சேவையில் சுமார் 5000 விமானிகள் கடமையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் விமானிகள் தொழிற்சங்கம் நடத்திய கூட்டத்தில் 98 வீதமானவர்கள் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        