ஒன்டாரியோவில் விமான விபத்து; பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டியில், ஒரு ஃப்லோட் (நீர்மேல்) விமானம் பிற்பகல் விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் இருந்த இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து, பெல்ல்வில்லுக்கு தெற்கே சுமார் 50 கிலோமீட்டரில் உள்ள ஈஸ்ட் லேக் பகுதியில், ப்ளேக்ஸ் கோவ் Flakes Cove அருகே நிகழ்ந்ததாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை, படகின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து, விமானத்தில் இருந்து வெளியேறி அதன் சிறகின் மேல் நின்றிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டது. விபத்தில் விமானிக்கும் ஒரு பயணிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், அவர்களின் நிலைமை குறித்து மேலதிக தகவல்கள் வழங்கப்படவில்லை. விமானம் நிலையான நிலையில் இருந்தாலும், பகுதியாக நீரில் மூழ்கியுள்ளது.
இது தொடர்பாக கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (TSB) விசாரணை அதிகாரிகளை அனுப்பவில்லையெனினும், சம்பவம் குறித்த தகவல்களை பதிவு செய்து விரிவான பகுப்பாய்வுக்காக சேகரித்து வருகின்றது.