குடிநீர் குழாய் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பால் வெள்ளக்காடாகிய மொன்றியல் நகரம்
கனேடிய நகரமொன்றில், குடிநீர் குழாய் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு, தெருக்களை வெள்ளக்காடாக்கியது.
கனடாவின் கியூபெக் மாகானத்திலுள்ள மொன்றியல் நகரில், கடந்த வெள்ளிக்கிழமை குடிநீர்க்குழாய் ஒன்றில் திடீரென பயங்கர வெடிப்பொன்று ஏற்பட்டது.
குழாய் வெடித்து தண்ணீர் பயங்கரமாக பீய்ச்சி அடிப்பதைக் காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி அதிரவைத்தன.
100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததாலும், மின்சாரம் தடைபட்டதாலும் பொதுமக்கள் சுமார் 12,000 பேர் வரை பாதிக்கப்பட்டார்கள்.
தண்ணீரில் வேறு ஏதேனும் கலந்திருக்கூடும் என்பதால், தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். இந்த அறிவுறுத்தல் காரணமாக 150,000 பேர் பாதிக்கப்பட்டார்கள்.
பின்னர், நேற்று இந்த அறிவுறுத்தல் விலக்கிக்கொள்ளப்பட்டது. நேற்று வரை உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது. அது முழுமையாக சரி செய்யப்பட்டுவிட்டதா என்பது தெரியவில்லை.