இயற்கை அனர்த்தங்களினால் கனடாவிற்கு இத்தனை பில்லியன் டொலர் நட்டம் ஏற்படும்?
இயற்கை அனர்த்தங்களினால் கனடாவிற்கு இத்தனை பில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2050ம் ஆண்டளவில் வெள்ளம், வறட்சி, புயல் காற்று போன்ற இயற்கை அனர்த்தங்களினால் 139 பில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஆய்வுகளின் மூலம் எதிர்வரும் 30 ஆண்டுகளில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் பாரியளவில் அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதிலிருந்து எதிர்வரும் 2050ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் நீர் தொடர்பான அனர்த்தங்களினால் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சுமார் 64 பில்லியன் டொலர் நட்டம் ஏற்படும் எனவும் இது மொத்த உற்பத்தியின் 0.2 வீதம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வறட்சி காரணமாக உற்பத்திதுறை பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.