தோட்டத்தில் பூக்கள் பூக்கவில்லை; கடும் கோபத்தில் வடகொரிய அதிபர் கிம் செய்த செயல்!
தமது தந்தையின் பிறந்தநாள் விழா மேடையை அலங்கரிக்க பூக்கள் தயாராகாத நிலையில், கடும் கோபத்தில் தோட்டக்காரர்களில் சிலரை சித்ரவதை முகாமுக்கு ஜனாதிபதி கிம் ஜாங் உன் அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் , தமது தந்தை மற்றும் தாத்தாவின் பிறந்தநாளை ஆண்டு தோறும் மிக விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதற்காகவே கிம், சிறப்பு பூக்களையும் தமது தோட்டத்தில் பூக்க வைத்து, மேடையில் அலங்காரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
வட கொரியாவின் முள்ளாள் தலைவர்களாக இருவருக்கும் அன்றைய தினம் பொதுமக்கள் திரண்டு வந்து மரியாதை செலுத்த வேண்டும் என்பது அங்கு எழுதப்படாத விதி.
இந்த நிலையில் தமது தந்தையின் பிறந்தநாளுக்கான பூக்கள், அதுவும் அவர் பெயரிலேயே அறியப்படும் பூக்கள் குறிப்பிட்ட நாளில் பூக்கவில்லை என கிம் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடும் கோபம் அடைந்த கிம் , தோட்டக்காரர்கள் குழு ஒன்றை அதிரடியாக சித்ரவதை முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதேவேளை உள்ளூர் நேரப்படி நாளை குறித்த விழாவானது மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சம்சூ மாவட்டத்தை சேர்ந்த 50 வயதான ஹான் என்பவரே தோட்ட மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு தற்போது 6 மாதங்கள் த.ண்.டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1988ல் வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஜப்பானிய தோட்டக்கலை நிபுணர் ஒருவரால் கலப்பின முறையில் புதிதாக உருவாக்கப்பட்ட பூ தான் Kimjongilias.
அதேவேளை அந்த பூ தற்போது மலரவில்லை என்பதன் காரணமாகவே ஹான் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.