எயார் கனடா விமான சேவையை பயன்படுத்துவோருக்கான அறிவுறுத்தல்
கனடாவின் முதனிலை விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் கனடா விமான சேவையை பயன்படுத்துவோருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் எயார் கனடா விமான சேவை பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த வாரத்தில் விமான பயணங்களை மேற்கொள்வோர் தங்களது பயணத்தை மாற்ற நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சில விமான பயணங்கள் ரத்து செய்யப்படவோ அல்லது காலம் தாழ்த்தப்படவோ கூடிய சாத்தியங்கள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையினால் விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான கட்டணத்தை மீறல் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
விமான பயண ரத்து தொடர்பில் 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என எயார் கனடா நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டால் விமான டிக்கெட் கட்டணத்தை தவிர வேறு மேலதிக தொகைகள் எதுவும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        