இனிமேல் இந்த வகை உணவுகள் கிடைக்காது; பிரிட்டன் மக்கள் கவலை
பிரெக்ஸிட் காரணமாக சில உணவு பொருட்கள் கிடைக்காது என்ற அறிவிப்பால் மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.
பிரிட்டன் முழுவதும் பிரக்சிட் காரணமாக சில வகையான உணவு பொருட்கள் இனிமேல் கிடைக்காது என மெக்டொனால்ட்ஸ் உணவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் பிரிட்டன் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் பிரிட்டனில் பல இடங்களில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள் மக்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரக்சிட் காரணமாக சில உணவுப் பொருட்களை பெறுவதில் பிரச்சினை உள்ளதால் அந்த வகை உணவுப் பொருட்களில் கிடைக்காது என கூறியுள்ளது.
மேலும் சில உணவு பொருட்களில் லெட்டூஸ் மற்றும் தக்காளி ஆகிய பொருட்கள் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள வாடிக்கையாளர்கள் நாங்கள் நினைத்தது அப்படியே நடந்து விட்டதாக கூறியுள்ளனர்.
அத்துடன் பிரக்சிட்டால் காய்கறிகள் தட்டுப்பாடானதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரக்சிட் மீதான தங்கள் ஆதங்கத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த உணவு பொருட்கள் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக பிரிட்டன் மக்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.