கனடிய மக்களின் ஆச்சரியமான பழக்கம்...
கனடாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடுதலாக நடை பயணத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் பெரும் தொற்று காலத்தின் பின்னர் அனேகமாக வாகனங்களில் போக்குவரத்து செய்வதை விடவும் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அலுவலகங்கள், கடைகள், வகுப்புகள், நிகழ்வுகள் போன்றவற்றிற்கு கனடிய மக்கள் கூடுதல் எண்ணிக்கையில் நடை பயணம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
எட்மோன்டனைச் சேர்ந்த மக்கள் 51% நடை பயணத்தை மேற்கொள்வதாகவும், கல்கரியை சேர்ந்தவர்கள் 23 வீதம் நடை பயணத்தை மேற்கொள்வதாகவும், ஒட்டோவாவை சேர்ந்தவர்கள் 20 வீதம் நடை பயணத்தை மேற்கொள்வதாகவும், மொன்றியலைச் சேர்ந்தவர்கள் 11 வீதம் நடை பயணத்தை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக இவ்வாறு நடை பயணம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விட்டலே இண்டெக்ஸ் (Vitality Index )எனப்படும் ஓர் நிறுவனத்தினால் இந்த அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலம் முதல் இவ்வாறு நடை பயணத்தை மேற்கொள்ளும் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
பல்வேறு தேவைகளுக்காக கனடிய மக்கள் கூடுதல் எண்ணிக்கையில் நடை பயணம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.