காற்பந்து உலகின் முடிசூடா மன்னன் பெலே; பிரேசிலில் மூன்று நாட்கள் துக்க தினமாக அனுஸ்டிப்பு
காற்பந்து உலகின் முடிசூடா மன்னராகப் போற்றப்படும் பெலேயின் மறைவுக்காக, பிரேசிலில் மூன்று நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. பிரேசிலின் அரசிதழில் அது பற்றிய சிறப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதிபர் அதிபர் ஜாயிர் பொல்சொனாரோ(Jair Bolsonaro) அதில் கையெழுத்திட்டுள்ளார். காற்பந்து வரலாற்றில் தென்கிழக்கில் உள்ள சான்ட்டோஸ் (Santos) குழுவுக்காகவே பெலே பெரும்பாலும் விளையாடியிருக்கிறார்.
இறுதிச்சடங்கு
பெலேவுக்கு திங்கட்கிழமை (2 ஜனவரி) அஞ்சலி செலுத்தலாம் என்றும் அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்றும் சான்ட்டோஸ் குழு அறிவித்துள்ளது.
சான்ட்டோஸ் நகரில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் அங்குள்ள விளையாட்டு அரங்கில் ரசிகர்கள் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த காற்பந்து மன்னன் பெலேவுக்கு உலகத் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் பெலேக்குப் புகழாரம் சூட்டி வருகின்றனர். காற்பந்தாட்டத்தைக் கலையாக்கியவர் பெலே என்று பிரேசில் நட்சத்திரம் நெய்மார் கூறினார்.
அதோடு பிரேசிலும் காற்பந்தும் பெலேவால் அங்கீகாரம் பெற்றதாகவும் அவர் கூறியதுடன், "பெலே மறைந்துவிட்டார். ஆனால் அவரது விந்தை மறையாது. பெலேவுக்கு மறைவில்லை," என்றும் நெய்மார் தெரிவித்துள்ளார்.