FIFA ; வெறும் 5 லட்சம் மக்களை கொண்ட மிகச் சிறிய நாடான கேப் வெர்டே வரலாற்றுச் சாதனை
கால்பந்து உலகக் கிண்ண கோப்பையில் மிகச் சிறிய நாடான கேப் வெர்டே, நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கேப் வெர்டேவின் மக்கள் தொகை வெறுமனே 5 இலட்சம் என்பது கால்பந்து இரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தியா போன்ற மிகப்பெரிய நாடு இதுவரை ஒருமுறைக்கூட உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. இந் நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சவூதி அரேபியாவுடன் கேப் வெர்டே மோதியது.

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய கேப் வெர்டே
இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் ஆட்டம் 0-0 என முடிவடைந்தது. மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேப் வெர்டே முன்னாள் சாம்பியன் ஸ்பெயினுடன் 0-0 என சமநிலை, உருகுவே உடனும் 2-2 என சமநிலை செய்திருந்தது. தற்போது, சவூதி அரேபியாவுடனும் 0-0 என சமன்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவுடனான ஆட்டத்தில், கேப் வெர்டே 51 சதவிகித பந்தை தன்வசம் வைத்திருந்தது.
87 சதவிகித துல்லியத்துடன் பந்தை பாஸ் செய்து அசத்தியது. தனது அறிமுக உலகக் கோப்பையிலேயே நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. மூன்று போட்டிகளிலும் சமநிலை செய்து 3 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக, வேல்ஸ் 1958, அயர்லாந்து, நெதர்லாந்து 1990, சீலே 1998லும் இதே மாதிரி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
40 வயதான கோல்கீப்பருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரே நாளில் 16 மில்லியன் (1.6 கோடி) பேர் பின்தொடர்ந்து ஊக்கம் அளித்தார்கள். இந்த கடைசி போட்டியிலும் 3 கோல்களை தடுத்து அசத்தினார்.