கனடாவில் போர்ட் வாகனங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை
கனடாவில் பயன்படுத்தப்படும் 6 இலட்சத்துக்கும் அதிகமான Ford வாகனங்கள் மீள அழைக்கப்படுவதாக போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சாப்ட்வேர் கோளாறு காரணமாக, டிரெய்லர் பிரேக் செயலிழக்க வாய்ப்பும் வெளிப்புற விளக்குகள் வேலை செய்யாமல் போகும் அபாயமும் இருப்பதால் இந்த மீள அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கூடுதலாக சுமார் 4.3 மில்லியன் வாகனங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன.

இந்த மீள அழைப்பு Ford நிறுவனத்தின் மிகவும் பிரபலமான சில மாடல்களை உள்ளடக்கியது: 2021 – 2026 Ford F-150, 2022 – 2026 Ford Super Duty, 2024 – 2026 Ford Ranger, 2022 – 2026 Ford Maverick ஆகிய மாடல்களில் இவ்வாறு கோளாறு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மென்பொருள் காரணமாக இவ்வாறு வாகனங்கள் மீளப் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிரெய்லர் வாகனத்துடன் தொடர்பை இழக்கலாம், டிரெய்லர் ஸ்டாப் லைட் மற்றும் டர்ன் சிக்னல்கள் எரியாமல் போகலாம், சில சந்தர்ப்பங்களில் டிரெய்லர் பிரேக் முழுமையாக செயலிழக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது வாகனத்தை கட்டுப்படுத்தும் திறனை குறைத்து விபத்து அபாயத்தை அதிகரிக்கக்கூடும். கனடாவில் பெரும்பாலான வாகனங்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் அப்டேட் கிடைக்கும்.
அனைத்து வாகனங்களுக்கும் மே மாத இறுதிக்குள் அப்டேட் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த கோளாறுடன் தொடர்புடைய 407 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எனினும், விபத்துகள் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என Ford தெரிவித்துள்ளது.