காசாவில் இருந்து எகிப்து எல்லை வழியாக வெளியேற காத்திருக்கும் வெளிநாட்டவர்!
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதேவேளை பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது.
இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி எகிப்தின் ராபா எல்லை வழியாக காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் சம்மதித்தது.
இதையடுத்து, நிவாரணப் பொருட்கள் அடங்கிய லொறிகள் காசாவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காசாவிலிருந்து எகிப்தில் உள்ள ராபா எல்லை வழியாக வெளியேறுவதற்காக வெளிநாட்டினர் 12 பேர் காத்திருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
போர் தொடங்கிய 3 வார காலத்துக்குப் பிறகு காசாவில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.