இலங்கையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டு பெண்
கொழும்பு - வெள்ளவத்தையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 66 வயதுடைய நெதர்லாந்துப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்னின் சடலம் நேற்று கண்டெடுக் கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அக்குடியிருப்பின் குளியலறையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை Tik Tok சமூக வலைத்தளத்தினூடாக 37 வயதுடைய சிங்கள இளைஞரொருவருடன் காதல் தொடர்பு பேணிவந்துள்ள குறித்த பெண், அவரை தேடி இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
இலங்கை வந்த அவர், அந்த இளைஞருடன் வீட்டில் தங்கி இருந்துள்ளதாகவும் பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.
இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், சடலம் தற்போது களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.