கனடாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
மொன்றியல் தடுப்புக்காவல் மையத்தில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து சிறைக்காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மொன்றியலிலுள்ள தடுப்புக்காவல் மையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த Nicous D’Andre Spring (21) என்னும் இளைஞர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக சிறைக்காவலர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Nicous உயிரிழந்ததன் காரணத்தை அறிவதற்காக அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக மாகாண பொலிஸ் செய்தித்தொடர்பாளர் Nicolas Scholtus தெரிவித்துள்ளார்.
எதனால் Nicous படுகாயமடைந்தார் என்பது குறித்த விவரங்களையோ, அவர் எதற்காக கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறித்த தகவல்களையோ அதிகாரிகள் வெளியிடவில்லை.