தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்களுக்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம் இன்று (16) தீர்ப்பளித்துள்ளது.
இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்கத் தவறியது மற்றும் தனது கைதை மறைக்க ஆவணங்களைத் திருத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் இத்தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

யூன் சுக் இயோல் மீது சுமத்தப்பட்டுள்ள எட்டு வழக்குகளில் மிக முக்கியமானது ‘அரச துரோகம் மற்றும் கிளர்ச்சி’ தொடர்பான வழக்காகும். இவ்வழக்கிற்கு அரச தரப்பு மரண தண்டனை கோரியுள்ள நிலையில், அதன் இறுதித் தீர்ப்பு பெப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.
தென் கொரிய அரசியலில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ள இந்தத் தீர்ப்பு, அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.