100 ஆவது பிறந்தநாள் கொண்டாடிய மலேசிய முன்னாள் பிரதமர்
மலேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தமது 100ஆவது பிறந்தநாளைக் காப்பிக் கடையில் கொண்டாடினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (6 ஜூலை) டாக்டர் மகாதீரின் ஆதரவாளர்கள் அம்பாங் ஜெயா எனும் இடத்திலுள்ள கடையில் அவருடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினர்.
100 ஆவது பிறந்தநாள்
கேக்கைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் அவர் சிரித்து மகிழும் படம் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
தமது தந்தையின் 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறினார்.
2007இல் டாக்டர் மகாதீர் 2 வாரங்களில் இருமுறை இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டபோது அவர் உடல்நிலை குறித்த கவலை அதிகம் இருந்ததாக மரினா சொன்னார்.
டாக்டர் மகாதீர் நலம்பெற்று வீடு திரும்ப உறுதுணையாக இருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வயது முதுமையால் சில நேரங்களில் மறதி தொற்றிக்கொண்டாலும் 100 வயதிலும் தமது தந்தை உடல் சுகத்துடன் இருப்பதே தமக்குத் திருப்தி என்றார் மரினா.