பாலியல் குற்றம்; இங்கிலாந்தின் முன்னாள் சார்ஜென்ட் மேஜருக்கு சிறை
இங்கிலாந்தில் நடந்த ஒரு தொழில் ரீதியான நிகழ்வில் 19 வயது ராயல் ஆர்ட்டிலரி கன்னர் ஜெய்ஸ்லி பெக் என்பவரை பேட்டரி சார்ஜென்ட் மேஜராக இருந்த மைக்கேல் வெப்பர், என்பவர் தாக்கினார்.
இதன்போது, 39 வயதான பேட்டரி சார்ஜென்ட் மேஜராக இருந்த மைக்கேல் வெப்பர், முன்பு ஒரு பாலியல் வன்கொடுமை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி
நேற்று வெள்ளிக்கிழமை சாலிஸ்பரியில் உள்ள பாதுகாப்பு படைவீரர்களை விசாரணை செய்யும் புல்ஃபோர்ட் கோர்ட் மார்ஷியல் சென்டரில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு தொழில்சார் நிகழ்வில் மைக்கேல் வெப்பர் , ஜெய்ஸ்லி பெக் என்பவரை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் அவரின் செயல் குறித்து குறித்த பெண் மேலதிகாரிக்கு புகார் அளித்த நிலையில் வெப்பருக்கு ஒரு சிறிய தண்டனை வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவம் காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று வில்ட்ஷயரில் உள்ள லார்க்ஹில் பாராக்ஸில் உள்ள அவரது அறையில் 19 வயது ஜெய்ஸ்லியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவரது மரணம் தற்கொலை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன் பின்னரே வெப்பருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வெபரின் தண்டனை, ஜெய்லியின் மரணத்திற்கு பின்னரே வந்த நிலையில் இந்த தண்டனை குறித்து ஜெய்லியின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.