பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க முன்னாள் அதிபர்!
பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த மனிதர் என்றும், சிறப்பாக அவர் பணியாற்றி வருகிறார் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்(Donald Trump) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் தனக்கு சிறந்த நட்புறவு இருப்பதாகவும், முன்னாள் அதிபர் ஓபாமா(Obama), தற்போதைய அதிபர் ஜோ பைடனை(Joe Biden) காட்டிலும் தானே இந்தியாவுக்கு சிறந்த நண்பர் என்றும் கூறியுள்ளார்.
இதன்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வேண்டுமென்று அனைவரும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப்(Donald Trump), இதுகுறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.