கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை: ஒரு எச்சரிக்கை செய்தி
கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை என்கிறார் தொழிலதிபர் ஒருவர்.
கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை, ஆகவே, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து பிள்ளைகளை இந்த நாடுகளுக்கு கல்வி கற்க அனுப்பும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுங்கள் என்கிறார் தொழிலதிபர் ஒருவர்.
GSF Accelerator என்னும் நிறுவனத்தில் நிறுவனரான ராஜேஷ் (Rajesh Sawhney) என்பவரே இந்த எச்சரிக்கை செய்தியைத் தெரிவித்துள்ளவர்.
ஹார்வர்டு பல்கலை மற்றும் London School of Economics ஆகிய கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர் ராஜேஷ்.
அப்படி இருந்தும், இனி பெரும் செலவு செய்து, கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புவதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் ராஜேஷ்.
சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை.
தேனிலவு காலகட்டம் முடிவடைந்துவிட்டது, கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புவதற்கு முன் பெற்றோர் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ராஜேஷ்.
ராஜேஷ் குறிப்பிட்டுள்ள நாடுகள், அங்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்கள் கல்வி கற்றபின் அந்நாடுகளில் தங்கி வேலை செய்வதை கடினமாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், ராஜேஷின் எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.