லண்டனில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்; ஒரேவீட்டில் நால்வர் கொலை

Sulokshi
Report this article
தென்கிழக்கு லண்டனில் இன்று அதிகாலை நான்கு பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்மண்ட்சேயில் உள்ள வீடு ஒன்றிலேயே இவ்வாறு மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் இறந்துள்ளதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.40 மணியளவில் பெர்மாண்ட்சேயின் டெலாஃபோர்ட் சாலையில் உள்ள வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த நான்கு பேரும் சந்தேக நபரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று துப்பறிவாளர்கள் நம்புகிறார்கள்.
சம்பவம் தொடர்பில் பெருநகர காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில்,
அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் உறவினர்களைத் தொடர்பு கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், துப்பறியும் அதிகாரிகள் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றதாகவும் அவர் கூறினார்.
கொலைச் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு தெற்கு லண்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதுடன் சம்பவம் தொடர்பில் மெட் சிறப்பு குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






