ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதல்!
சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது விமானதாக்குதலை மேற்கொண்டதாக பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெபெர்கொனு தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கைகளில் எங்கள் படையினர் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர் என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் ரபெல் போர்விமானங்களும் அமெரிக்காவின் ரீப்பர் ஆளில்லா விமானங்களும் ஐஎஸ் அமைப்பின் இரண்டு இலக்குகள் மீது 7 குண்டுகளை வீசின என அவர் கூறியுள்ளார்.
அதேவேளை பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னர் பிரான்ஸ் ஐஎஸ் இலக்குகள் மீது மேற்கொண்ட முதல் தாக்குதல் இது ஆகும்.
மேலும் 2014 - 2015 முதல் சிரியா ஈராக்கில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக செயற்பட்டுவரும் சர்வதேச கூட்டணியில் பிரான்ஸ் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.