பிரான்ஸில் புதிதாக 58 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று!
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 58,432 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 91 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பிரான்ஸில் 1 கோடியே 53 இலட்சத்து 37ஆயிரத்தை 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 19 இலட்சத்து 79 ஆயிரத்து 539 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 333 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 11,936 தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 81 இலட்சத்து 46 ஆயிரத்து 877 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.