மாலி நாட்டுக்கு கெடு விதித்த பிரான்ஸ்
மாலி - பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் தற்போது மாலிக்கு பிரான்ஸ் 15 நாட்கள் கெடு விதித்துள்ளது.
மாலி நாட்டில் தற்போது பிரான்ஸ் நாடு இராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில காலமாக பிரென்சு அரசு தனது நாடு ராணுவத்தினரை திரும்ப அழைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இதன் காரணமாக மாலி அரசு பிரான்சின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை என தெரிவித்து அந்நாட்டு தூதுவரை நாட்டை விட்டு வெளியேறும்படி வலியுறுத்தியுள்ளது.
இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, தற்போது பிரான்ஸ் மாலிக்கு 15 நாட்கள் கெடு விதித்துள்ளது. ‘மாலியின் எதிர்காலம் குறித்த முடிவை மாலிக்கு வழங்குகிறோம். பிரான்ஸ் 15 நாட்களுக்குள் தீர்மானம் எடுக்க முடிவு செய்தது.
இவ்வாறு பிரான்ஸ் ஊடகப் பேச்சாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக மாலியில் தற்போது 4,000 பிரான்ஸ் படையினர் செயல்பட்டு வருகின்றனர். அனைத்து துருப்புக்களையும் அகற்றுவது குறித்து பிப்ரவரி நடுப்பகுதியில் முடிவு எடுக்கப்படும் என்றும், மாலியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் மூடப்படும் என்றும் தெரிகிறது.