பிரான்ஸில் இதுவே முதன்முறை: புதிய பிரதமராக 34 வயதான கேப்ரியல் அட்டல்!
பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் வெற்றிடமாக இருந்த அந்த பதவிக்கு 34 வயதான கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் மீது சமீப காலமாக அந்நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வந்தன.
இந்த நிலையில், அந்நாட்டு பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்ட இமானுவேல் மேக்ரான், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று அறிவித்துள்ளார்.
இதன்படி பிரான்ஸின் 2 ஆவது பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் எலிசபெத் போர்ன்.
இதனை தொடர்ந்து கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டலை பிரதமராக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நியமித்துள்ளார்.
34 வயதான கேப்ரியல் அட்டல் ஓர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதுடன் பிரான்ஸின் இளம் பிரதமர் என்ற பெருமைக்குரியவரானார்.
மேலும் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் பிரான்ஸ் பிரதமர் ஆவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிட்டதக்கது.