உக்ரைன் தொடர்பில் பிரான்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரே நாளில் மட்டும் கீவ் நகர பகுதியில் 75 ஏவுகணைகளை ட்ரோன்கள் மூலம் வீசியுள்ளது.
இதையடுத்து ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு வான் தடுப்பு சாதனங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சா் செபஸ்டின், உக்ரைன் ராணுவத்தில் 2000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு பிரான்ஸ் வழங்கும் ராணுவ தளவாடங்களை கையாள்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளதாகவும், சிறப்பு ராணுவ பயிற்சியும் உக்ரைன் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை 18 சீசர் பீரங்கிகளை பிரான்ஸ் உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், கூடுதலாக ஆறு சீசர் பீரங்கிகளை வழங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பிரான்ஸ், ராணுவ தளவாடங்களை வாங்கும் வகையில், உக்ரைனுக்கு 100 மில்லியன் யூரோ வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.