எரிபொருள் நெருக்கடியால் ஸ்தம்பிதமடைந்த பிரான்ஸ்!
பிரான்சில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்(Emmanuel Macron) மே மாதம் புதிய ஜனாதிபதி பதவியை வென்றதிலிருந்து அவருக்கு மிகப்பெரிய சவாலாக முன்னணி தொழிற்சங்கங்கள் செவ்வாய்கிழமை வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
பிரான்சின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான TotalEnergies இன் தொழிலாளர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரான்சில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏறக்குறைய மூன்று வாரங்களாக நீடித்த எரிபொருள் நிறுத்தம், பிரான்சின் சேவை நிலையங்களில் வெறும் 30 சதவீதத்திற்கும் அதிகமான விநியோகங்களை முடக்கியதால், வாகன சாரதிகள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையிலேயே, நாடு தழுவிய போக்குவரத்து வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் தயாராகி வருகதாவ தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மீது பெருகிய முறையில் பொறுமையிழந்த அரசாங்கம், முக்கிய ஊழியர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளுவதாகக் கூறியது.
பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்துவிட்டது என்று நிதியமைச்சர் புருனோ லு மைர்(Bruno Le Maire) திங்களன்று BFMTV ஒளிபரப்பாளரிடம் கூறினார்.
இதனிடையே, நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏழில் மூன்று மற்றும் ஐந்து பெரிய எரிபொருள் கிடங்குகள் (சுமார் 200 இல்) பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Esso-ExxonMobilல் வேலைநிறுத்த நடவடிக்கை கடந்த வார இறுதியில் நிறுவனத்தின் இரண்டு பிரெஞ்சு சுத்திகரிப்பு ஆலைகளில் முடிவடைந்தது.
நிர்வாகத்திற்கும், பெரும்பான்மையான தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிதவாத தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
வேலைநிறுத்தங்கள் முடிவடைந்த பின்னர் பெட்ரோல் நிலையங்களில் இயல்பான விநியோக நிலைமைகள் திரும்ப குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும் என்று அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.