யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் போர்த்துக்கல் அணிகள் வெற்றி!
ஆட்டத்தில் குரூப் எப் பிரிவில் போர்த்துக்கல், ஹங்கேரி அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் எந்த கோலும் அடிக்கவில்லை.
இதனால் 0-0 என சமனிலையில் இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் இறுதியில் போர்ச்சுக்கல் அணி அதிரடியாக ஆடியது. ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் போர்த்துக்கல் அணி ஒரு கோல் அடித்தது.
மேலும் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோ 87-வது நிமிடம் மற்றும் 92-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், போர்த்துக்கல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டி குரூப் எப் பிரிவில் பிரான்ஸ், ஜெர்மனிக்கும் இடையில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடந்த முதல் பாதி ஆட்டத்தில் 20-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹம்மெல்ஸ் ஒரு கோல் அடித்தார்.
இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது