மாலியிலிருந்து தனது படைகளை திரும்பப் பெற்றது பிரான்ஸ்
மாலியில் இருந்து பிரான்ஸ் தனது படைகளை திரும்பப் பெறுவதாகவும் ஆனால் அண்டை நாடான மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இராணுவ பிரசன்னத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் வியாழனன்று நடைபெற்ற மாநாட்டின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இந்த தகவலை அறிவித்தார்.
இதன்படி மூலோபாயம் மற்றும் இலக்குகளை பகிர்ந்து கொள்ளாத மாலியின் இடைநிலை அதிகாரிகளுடன் நாங்கள் இராணுவ ரீதியாக ஈடுபட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் மாலியில் குடிமக்களுக்கான ஆதரவு தொடரும் என்றும், அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக சஹேல் மற்றும் கினியா வளைகுடாவில் நட்பு நாடுகளின் கூட்டணி தொடர்ந்து இருக்கும் என்று மக்ரோன் கூறினார்.
இதன்போது மாலியில் 2,400 பேர் உட்பட சஹேல் பகுதியில் பிரான்ஸ் சுமார் 4,300 வீரர்களை கொண்டுள்ளது.
மேலும் மாலியில் 2013 முதல் பிரெஞ்சுப் படைகள் செயல்பட்டு வருகின்றன, அங்கு அவர்கள் தலையிட்டு இஸ்லாமிய தீவிரவாதிகளை அதிகாரத்தில் இருந்து விரட்டியடித்தனர்.
ஆனால் கிளர்ச்சியாளர்கள் பாலைவனத்தில் மீண்டும் ஒன்றிணைந்து மாலி இராணுவத்தையும் அதன் கூட்டாளிகளையும் தாக்கத் தொடங்கினர்.