கனடாவில் இடம் பெறும் நிதி மோசடி குறித்து எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் இடம்பெறும் நிதி மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண போலீசார் இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மோசடி சம்பவத்தில் நபர் ஒருவர் சுமார் 20,000 டாலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்குமான கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறி, பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உத்தரவாதம் அளித்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் வங்கியில் இருக்கும் பணத்தை நம்பிக்கை நிதியம் ஒன்றில் வாய்ப்பு செய்வதாக கூறி பணம் கொள்ளையிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி இந்த பணம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலரிடம் மோசடிகள் இடம் பெற்று இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.