லொறி சாரதிகளுக்கான நன்கொடையை முடக்கிய கனடா பிரதமர்: கிடைத்த நூதன பதிலடி
கனடாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் லொறி சாரதிகளுக்கு ஆதரவாக திரட்டப்பட்ட நன்கொடைகளை ட்ரூடோ அரசாங்கம் முடக்கிய நிலையில், தற்போது அவர்கள் பிட்காயின்களில் நிதி திரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா தலைநகரில் இரண்டு வாரத்திற்கும் மேலாக லொறி சாரதிகளின் போராட்டம் நீடித்து வந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
மட்டுமின்றி, எரிபொருள் உட்பட லொறி சாரதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர்களையும் பொலிசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் லொறி சாரதிகளுக்கு ஆதரவாக இணையம் ஊடாக சுமார் 10 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டது.
கனடாவில் இது சாதனையாக பார்க்கப்பட, சுதாரித்துக்கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாகம், விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், குறித்த நிதியை லொறி சாரதிகள் பயன்படுத்தாதவகையில் முடக்கியது.
ஆனால், தற்போது பிட்காயின் ஆதரவாளர்கள் குழு ஒன்று, லொறி சாரதிகளுக்கு பிட்காயின் ஊடாக நிதி திரட்டி வருகின்றனர். மொத்தம் 21 பிட்காயின் திரட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 12.41 பிட்காயின்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மதிப்பு 542,000 டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை உரிய காலத்தில் லொறி சாரதிகளிடம் ஒப்படைக்கப்படும் என நிதி திரட்டிவரும் குழு அறிவித்துள்ளது.
முன்னதாக Gofundme தளத்தில் திரட்டப்பட்ட 9 மில்லியன் டொலர் நன்கொடையை, கனடா நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று முடக்கியது தொடர்பில் விசாரிக்கப்படும் என கலிபோர்னியா ஆளுநர் Ron DeSantis உறுதி அளித்துள்ளார்.