ஓமன் கடற்பகுதியில் எரிபொருள் கப்பல் மீது தாக்குதல்; இந்திய மாலுமிகள் மாயம்
ஓமன் கடற்பகுதியில் எரிபொருள் கப்பல் ஒன்றின் மீது நேற்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், இரண்டு இந்திய மாலுமிகள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 11 மாலுமிகளுடன் பயணித்த எம்.டி. பெட்ரோ டால்ஃபின் எரிபொருள் கப்பல், ஓமனின் சோஹார் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாக இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால், தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

கப்பலில் இருந்த 11 மாலுமிகளில் 9 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இருவரையும் காணவில்லை.
அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் உள்ளூர் கடலோரக் பொலிஸ்படையினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன மாலுமிகளைக் கண்டுபிடிப்பதற்கும், மீட்புப் பணிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து இந்தியா நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
. எனினும், இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.