பட்டப்பகலில் கும்பலாக நகை கடையில் கொள்ளை ; அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பட்டப்பகலில் நகைக்கடை ஒன்றில் நுழைந்த கும்பல், 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் ராமோன் நகரில் மிக பிரபலமான வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள நகை கடைக்கு நேற்று மதியம் 25 பேர் கும்பல் ஒன்று நுழைந்தது.
ஆயுதங்களுடன் வந்த கும்பல்
ஆறு வாகனங்களில் வந்த அந்த கும்பல், துப்பாக்கி, கத்தி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வாடிக்கையாளர்களையும், ஊழியர்களையும் மிரட்டியது.
பின்னர் அக்கும்பல் அங்கு வைக்கப்பட்டிருந்த நகைப்பெட்டிகளை உடைத்து, 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. பொலிஸார் அக்கும்பலின் வாகனங்களை துரத்திச் சென்றனர்.
ட்ரோன்கள், கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் துரத்திச் சென்றதில், ஏழு பேர் மட்டும் பிடிட்டனர். பின்னர் உள்ளூர் காவல் துறையின் உதவியுடன் ஓக்லாந்தில் மூன்று பெரியவர்கள் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர்.
இது, கச்சிதமாக திட்டமிடப்பட்ட கொள்ளை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்; தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.