பொதுமக்களுக்கு எச்சரிக்கை... இவர்கள் ஆபத்தானவர்கள்: வான்கூவர் பொலிஸ் வெளியிட்ட 6 பேர் பட்டியல்
வான்கூவர் பொலிசார் 6 பேர் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வான்கூவர் காவல்துறையின் ஆதம் பால்மர் தெரிவிக்கையில், பட்டியலிடப்பட்டுள்ள ஆறு நபர்களும் எதிர் கும்பலின் அடுத்த இலக்கு என்றும், இந்த கும்பலுக்கிடையே மோதல் ஏற்படும் போது அப்பகுதியில் சிக்கும் பொதுமக்களுக்கு அது ஆபத்தாக முடியலாம் என எச்சரித்துள்ளனர்.
பெயர்களை வெளியிட்டு அவர்களை அசிங்கப்படுத்தும் நோக்கம் வான்கூவர் காவல்துறைக்கு இல்லை எனவும், ஆனால் வான்கூவர் குடிமக்களை எச்சரிப்பது காவல்துறையின் கடமை எனவும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி 2021ல் இதுவரை கும்பல் தொடர்பான கொலைகள் மட்டும் 20 நடந்துள்ளதாகவும், அதே எண்ணிக்கையில் கொலை முயற்சிகளும் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 வாரங்களில் மட்டும் பொதுவெளியில் வைத்து 7 பேர்களை இதுபோன்ற கும்பல்கள் சுட்டுக்கொன்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காணப்பட்டவர்களில், Garinder Deo(35); Harjit Deo(38); Barinder Dhaliwal(38); Meninder Dhaliwal(28); Ekene Anigbo(22); மற்றும் Damion Ryan(41) ஆகிய ஆறு பேர்களும் முதன்மையானவர்கள் என வான்கூவர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.