கனடாவில் எரிபொருள் விலை 2 டொலரை எட்டும்: வெளிவரும் தகவல்
கனடாவின் சில பகுதிகளில் இன்னும் சில மாதங்களில் எரிபொருள் விலை லிற்றருக்கு 2 டொலரை எட்டும் என ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த 13 மாதங்களில் கனடாவின் சில பகுதிகளில் எரிபொருள் விலை லிற்றருக்கு 2 டொலரை எட்டும் என எரிபொருள் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் அதிகரிக்கும் எண்ணெய் விலை, கனேடிய டொலரின் நிலை, மாகாண வரிகள் உள்ளிட்ட பல காரணிகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.
மட்டுமின்றி பெடரல் நிர்வாகத்தின் சுத்தமான எரிபொருள் தரநிலை என்ற திட்டமும் 2022 டிசம்பர் 1ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. மேலும், தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் 84 டொலரில் தடுமாற, இன்னும் அது 100 டொலரை எட்டும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
இதனால் 1.47 டொலருக்கு விற்கப்படும் எரிபொருள், லிற்றருக்கு மேலும் 18 cents அதிகரிக்கக்கூடும். அத்துடன் பெடரல் மற்றும் மாகாண வரிகளுடன் லிற்றருக்கு 1.83 டொலர் என இனி எரிபொருள் விற்பனையாகும்.
குறைந்தபட்சம் 1.75 டொலர் என விற்பனையாக வாய்ப்புகள் இருப்பதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.