கனடாவின் கரையோரப் பிராந்தியங்களில் எரிபொருள் விலையில் மாற்றம்
கனடாவின் கரையோரப் பிராந்தியங்களில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டுக்கான முதலாவது விலை மாற்றத்தில் இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
நோவா ஸ்கோஷியாவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 5.6 சதத்தினால் உயர்வடைந்துள்ளது. டீசலின் விலையும் லீற்றர் ஒன்றுக்கு 5.1 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகளில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 1.1 சதத்தினால் உயர்வடைந்து 164.3 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசலின் விலையும் 2.9 சதத்தினால் உயர்வடைந்துள்ளது.
நியூபிரவுன்ஸ்விக்கில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 1.3 சதத்தினாலும் ஒரு லீற்றர் டீசலின் விலை 2.4 சதத்தினாலும் உயர்வடைந்துள்ளது.