அமெரிக்க தாக்குதலுடன் தொடர்புடைய நபரின் கனடிய பயணம் குறித்து விசாரணை
அமெரிக்காவில் புத்தாண்டு காலப் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்தி 15 பேரை படுகொலை செய்த சந்தேக நபரின் கனடிய பயணம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நியூ ஓர்லானில் வாகனமொன்றை மக்கள் மீது மோதச் செய்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
தாக்குதல்தாரி கடந்த 2023ம் ஆண்டு ஜுலை மாதம் ஒன்றாரியோவிற்கு பயணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பயணம் தொடர்பிலும் அமெரிக்க புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்சுதீன் ஜாபர் என்ற நபரே இந்த குற்றச் செயலுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் தாக்குதலுக்கு முன்னதாக எங்கெல்லாம் பயணம் செய்தார் யாருடன் தொடர்பு பேணி வந்தார் என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜாபர் கனடாவிற்கு பயணம் செய்திருந்ததனை கனடிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் உறுதி செய்துள்ளனர்.
கனடாவில் தங்கியிருந்த காலத்தில் குறித்த நபரின் செயற்பாடுகள் குறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதனை வழங்குமாறு கனடிய அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.