பணி நீக்கம் செய்யப்பட்டதனால் பணியாளர் எடுத்த விபரீத முடிவு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் சாத்தம்-கென்ட் பகுதியில் கத்தி குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தன்னை பணியிலிருந்து நீக்கிய இரு மேலாளர்களை கத்தியாலும் கொடுவாளாலும் தாக்கியதாக பணியாளர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரிட்ஜ்டவுன் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆண் ஒருவரே இந்த குற்றச்சா்டிடன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ப்ளென்ஹீம் நகரின் ஜேம்ஸ் வீதியிலுள்ள ஒரு வணிக நிலையத்தில், பணியிலிருந்து நீக்கப்பட்டதை அறிந்த அந்த ஊழியர் ஆவேசமடைந்து வெளியேற மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில், அவர் இரு மேலாளர்களையும் கத்தியால் குத்தியதாகவும், கொடுவாளை பயன்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் இரு மேலாளர்களுக்கும் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குற்றவாளியும் காயங்களுக்கு சிகிச்சை பெற்று, பின்னர் பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபருக்கு எதிராக பொலிஸார் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுளள்துடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.