காசா சமாதான திட்டத்திற்கு கனடா பாராட்டு
காசா மோதலை நிறுத்தும் நோக்கில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் சமாதான திட்டத்தின் செயல்பாட்டை உறுதிசெய்ய அனைத்து தரப்பினரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என கனடா பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது கார்னி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அடுத்த 48 மணி நேரம் மிகவும் தீர்மானகரமானவை. நாங்கள் உற்சாகத்துடன் இருக்கிறோம், ஆனால் இது முதல் கட்டமே — இன்னும் பல செய்யப்பட வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் முயற்சிகளை கார்னி பாராட்டியுள்ளார். கனடா மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது.
இதை ஆதரிக்க பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரும் அமெரிக்க ஆதரவில் உருவாக்கப்பட்ட அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தில் ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளன.