இஸ்ரேலின் தீவிர தாக்குதல் ; காசா மக்களை உடனடியாக வெளியேற உத்தரவு
காசா மீது, இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அங்கு வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
நேற்று முதல் காசா முழுவதும், தீவிர வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலுக்கு அமைய, இஸ்ரேல், காசாவில் இனப்படுகொலை செய்ததாக, ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்த நிலையிலேயே, இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது, 40 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நேற்றிரவு நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் காசாவில் உள்ள சிறுவர் மருத்துவமனை உட்பட மூன்று மருத்துவமனைகள் குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பலஸ்தீனிய மக்கள் வெளியேறுவதற்கு மேலும் 48 மணி நேரம் வீதியை திறந்துவிடுவதாக இஸ்ரேல் இராணுவம் இன்று அறிவித்துள்ளது.