யூகான் மாகாண புதிய முதல்வராக கரி டிக்சன் தெரிவு
கனடாவின் யூகான் மாகாணத்தின் புதிய முதல்வராக கரி டிக்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலில் யூகான் கட்சி (Yukon Party) பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் கட்சித் தலைவர் கரி டிக்சன் யூகானில் பிறந்த முதல் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
இது மாற்றத்திற்காக யூகான் மக்களால் வழங்கப்பட்ட தெளிவான தீர்ப்பு என டிக்சன் வெற்றியின் பின்னர் குறிப்பிட்டார்.

அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி
மக்கள் மாற்றத்தை விரும்பினர் — வீடமைப்பு நெருக்கடியை தீர்க்கவும், மக்கள் தொகை வளர்ச்சியுடன் இணைந்த சுகாதார அடுக்கமைப்பை உருவாக்கவும், யூகானில் எந்த சமூகத்திலும் வாழும் ஒவ்வொருவருக்கும் தேவையான சுகாதார சேவையை வழங்கவும் அவர்கள் எதிர்பார்த்தனர்,என அவர் குறிப்பிடடுள்ளார்.
அவர் மேலும், வைற்ஹோர்ஸ் நகர மையப் பகுதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள், குற்றவாளிகளை பொறுப்பேற்கச் செய்வதற்கான நீதித்துறை மாற்றங்கள், மற்றும் தனியார் துறையின் வளர்ச்சியை முன்னுரிமைப்படுத்துவது போன்றவை புதிய அரசின் முக்கிய இலக்குகள் என குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வருமாறு மக்கள் வாக்களித்துள்ளனர் என டிக்சன் கூறியுள்ளார்.
அடுத்த நான்கு ஆண்டுகள் சில கடினமான முடிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய காலமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தேர்தலில் டிக்சனின் யூகான் கட்சி 52% வாக்குகளுடன் 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இது 2021 தேர்தலை விட சுமார் 13 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், கேட் வைட் தலைமையிலான என்டிபி (NDP) கட்சி 6 இடங்களுடன் 38% வாக்கு பெற்று அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக மாறவுள்ளது.
இது 2021 தேர்தலை விடவு 10 சதவீதம் அதிக வாக்குகளாகும்.