அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்!
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அவுஸ்திரேலியாவின் கீலோங் (Geelong) பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்தொன்று சம்பவித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விபத்து அவுஸ்திரேலியாவின் எரிபொருள் பாதுகாப்பிற்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

விவா எனர்ஜி (Viva Energy) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே தீ பரவியுள்ளதாக விக்டோரியா தீயணைப்புப் படை துணை ஆணையர் மிச்செல் கவுலிங் தெரிவித்துள்ளார்.
தற்போது தீ முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதனால் டீசல் அல்லது பெற்றோல் உற்பத்திக்கு உடனடிப் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தீயணைப்புப் படை துணை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.