ரஷ்யாவை எச்சரித்த ஜெர்மனி ; மிரட்டிய புடின்!
ஜெர்மனி அணுசக்தி உலைகளை ஒழிக்க நினைக்கும் போதும் கூட பிரான்ஸ் எதிர்த் திசையில் தான் சென்றுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸில் நிறைய அணுமின் நிலையங்கள் உள்ளன. மேலும் சில அணு மின் நிலையங்கள் கட்டவும் பிரான்ஸ் விரும்புகிறது. எனவே தேவைக்கு அதிகமாக இருக்கும் அணு சக்தியை, ஜெர்மனிக்கு அனுப்ப பிரான்ஸ் முன்வந்துள்ளது.
ரஷ்யா கொடுத்த இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என்று ஜெர்மனிய அரசு ரஷ்யாவை எச்சரித்தது.
உடனே பதிலளித்த ரஷ்யாவோ “அப்படி நீங்கள் செய்தால், அந்த குறைந்தபட்ச விலையில் கூட எங்களுக்கு நஷ்டம் வராது. ஆனால் உங்களுக்கு வரும் எண்ணெய் விநியோகத்தையும் சேர்த்து நிறுத்திவிடுவோம்.
மேலும் குளிர்காலத்தில் உங்களுக்கு தான் கூடுதல் சிரமமாக இருக்கும்.” என்று ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் புடின்(Vladimir Putin) மிரட்டியுள்ளார்.
குளிர்காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த மின் தடைகள் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்திருகிறது.