கொரோனாவுக்கு மத்தியிலும் பணியாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட ஜேர்மனி!

Goverment Germany Covid19 Gardening Reception Great happy news Administrators Kitchen Staff Cleaners Laundry
By Sulokshi Feb 23, 2022 06:06 PM GMT
Report

 கோவிட் சூழலின் மத்தியிலும் வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியைச் செய்த மர்ரூ முதியோர் இல்லங்களில் பணி செய்யும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

அதன்படி முதியோர் இல்லங்களில் முழு நேரம் பணி செய்யும் பணியாளர்களுக்கு இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் 550 யூரோக்கள் வரை போனஸ் வழங்க இருப்பதாக சுகாதாரத்துறையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை நர்ஸிங் ஹோம்களிலும் முதியோர் இல்லங்களிலும் பெருந்தொற்று காலகட்டத்தின்போது சிறப்பாக பணி செய்த செவிலியர்களுக்கு இந்த போனஸ் கிடைக்கும் என தெரிகிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbachம் உறுதி செய்துள்ளார்.

அதன்படி 2020 நவம்பர் 1க்கும், 2022 ஜூன் 30க்கும் இடையில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது வயதானவர்களை கவனித்துக்கொள்ளும் பிரிவில் பணியாற்றியவர்கள், ஜூன் 30, 2022 அன்றும் பணியிலிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு இந்த போனஸ் கிடைக்கும்.

இந்நிலையில் அதிகபட்சமாக அவர்களுக்கு 550 யூரோக்கள் வரை போனஸாக கிடைக்கும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாகிகள், சமையல் அறை பணியாளர்கள், சுத்தம் செய்பவர்கள், ரிசப்ஷன், தோட்டவேலை, துணி துவைத்தல் மற்றும் செக்யூரிட்டி பணியாற்றியவர்கள், குறைந்தபட்சம் 25 சதவிகிதம் கோவிட் நோயாளிகளுக்காக பணி செய்திருந்தால் அவர்களுக்கு 370 யூரோக்கள் வரையும்,

முதியோர் இல்லங்களில் பயிற்சி பெறுவோராக இருந்தவர்களுக்கு 330 யூரோக்கள் வரையும், மற்ற பணியாளர்களுக்கு 190 யூரோக்கள் வரையும், தன்னார்வலர் திட்டத்தின் கீழ் சேவை செய்தோருக்கு 60 யூரோக்கள் வரையும் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதியோர் இல்லங்களிலும் மருத்துவமனைகளிலும் பணியாற்றிய செவிலியர்களுக்கான போனஸாக, ஜேர்மன் அரசாங்கம் 1 பில்லியன் யூரோக்களை ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US