130 ஆண்டுகளுக்குப் பின் உருவான பேய் ஏரி
கலிஃபோர்னியாவின் பேய் ஏரி என்றழைக்கப்படும் துலாரே ஏரி 130 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உருவாகியுள்ளது.
மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் தற்போது உருவான இந்த ஏரி சுமார் 94,000 ஏக்கர் விவசாய நிலங்களை மூழ்கடித்துள்ளது.
பேய் ஏரி
கடந்த 19ஆம் நூற்றாண்டில், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீர்பாசனத் திட்டங்களால் காணாமல் போயிருந்த துலாரே ஏரி மனிதனால் உருவாக்கப்பட்டு ஏரிக்கு வரும் நீர்ப்பாதைகளும் அழிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேல் காணாமல் போயிருந்த ஏரி தற்போது மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது.
மிசிசிபி ஆற்றின் நீரினால் நிரம்பி வந்த துலாரே ஏரி, நாட்டின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கியிருந்தது. தற்போது, மிகப் பெரிய பனிப்பாறை உருகி 130 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஏரி உருவாகியிருப்பதால், சுமார் 94,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மூதாதையர்கள் மிகப்பெரிய முயற்சி எடுத்து, நீர்நிலைகளான ஏரிகள் மற்றும் அவற்றுக்கு தண்ணீரைக் கொண்டு வரும் பாதைகளையும் உருவாக்கி நீர்வழித்தடங்களை அமைத்திருந்தனர்.
அனைத்தும் தற்கால மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனத்தால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், தற்போது பனிப்பாறை உருகியதால் உருவான தண்ணீர் இந்த ஏரியில் நிரம்பி மீண்டும் பேய் ஏரி உருவானதாகக் கூறப்படுகிறது.