அமெரிக்காவின் வான்வெளியில் பறக்கும் ராட்சத பலூன்
அமெரிக்காவின் வான்வெளியில் தற்போது பறந்துகொண்டிருக்கும் ஒரு ராட்சத பலூன் சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
பல ஆண்டுகல் கழித்து சீனாவிடம் பல விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த அமெரிக்கா அதனை தற்போது கைவிட்டுள்ளது.
அந்த ராட்சத பலூன் சீனாவுடையது என உறுதியான நிலையில் அமெரிக்க தரப்பில் சீனாவுக்கு கடும் கண்டனங்கள் வைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த ராட்சத பலூன் கண்காணிக்கும் வல்லமை படைத்த ஒன்றாக உள்ளது என அமெரிக்கா கண்டறிந்துள்ளது.
மூன்று பேருந்துகள் ஓன்றாகும் உருவத்தில் இருக்கும் அந்த ராட்சத பலூன், அமெரிக்காவின் வான்வெளியில் இருந்து போக இன்னும் சில நாள்களாகும் எனவும் அமெரிக்காவின் பாதுகாப்பு துறையான பென்டகன் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (பிப். 3) இரவு சீனாவுக்கு புறப்பட இருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தனது சுற்றுப்பயணத்தை தற்போது ரத்து செய்துள்ளார்.
ராட்சத பலூன் குறித்த தகவல்கள் அதிபர் பைடனிடம் விவரிக்கப்பட்டதாகவும் சீனாவின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து கண்காணிப்பில் சீனா ஈடுப்பட்டது குறித்து விவரித்ததாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்களின் பாதுகாப்பை கருதி அதனை அழிக்கும் யோசனையை தற்போது கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சீனா, 'அமெரிக்க வான்பரப்பில் பறந்து கொண்டிருக்கும் பலூன், வானிலை மற்றும் பிற அறிவியல் நோக்கங்களுக்கானது. அது அமெரிக்க வான்வெளியில் வழிதவறிச் சென்றதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்' என பதிலளித்துள்ளது.
அந்த பலூனில் எவ்வித ராணுவ ஆயுதங்களோ அல்லது, மக்களை பாதிக்கும் வகையிலான பொருள்கள் ஏதுமில்லை என பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை தரப்பு உறுதிசெய்தன.
சீனாவின் வருத்தம் அறிக்கையை அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. "ஆனால் எங்கள் வான்வெளியில் இந்த பலூன் இருப்பது, இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். மேலும் இது நிகழ்ந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் கூறினார்.